ஒரு மனிதன்
பிறந்து வளர்ந்து அவன் இம்மண்ணை விட்டு செல்லும் வரையிலும் அவன் தன்னை அறிய,தன்
மனம் அறிய,தான் யார் என்று அறிய,உறவு அறிய,ஊர் அறிய,சுற்றம் அறிய,சூழ்நிலை
அறிய,அனைத்து சுவை அறிய,வாழ்வின் நிலை அறிய என்று எந்த பரிமாணத்தில் அவன்
இருந்தாலும் அவனுக்கு ஒற்றை பாட்டு மூலமாக நிதர்சனம் சொல்லி தரும் ஆசானாக இன்று
வரையில் பழைய பாடல்களே இருக்கின்றது...
அதில் நான்
சொன்னது எல்லாமே சில சூலுக்கு உரிய சில பாடல்கள்...
ஆழ்கடலில் சிறு
துளிகள் போலவே ஆகும்....
வாலிபக் கவிஞர்
வாலி பற்றி நமக்கு எல்லாம் தெரியும்...எவ்வளவு பாடல்கள் அவர் இயற்றி இருக்கிறார்,திரையுலகில்
எத்தனை சாதனைகள் புரிந்து இருக்கிறார் என்று தெரியும்...அவரே விரக்தியின் எல்லைக்கு
சென்று வெறுத்து திரையுலகமே வேண்டாம் என்று முடிவுக்கு வந்து செல்ல தீர்மானித்த
போது அவர் மனதை மாற்றியது ஒரு பாட்டு தான்....
ஆம்,,
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
உனக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
இந்த பாடல் வரிகள்
தான் அவரை வீறு கொண்டு எழ செய்து வெற்றி நடை போட செய்தது என்றால் பழைய பாடல்கள்
கேட்க மட்டும் இல்ல ஒருவனை வீறு கொண்டு எழ செய்யவும் முடியும் என்பதை நிருபித்து காட்டியவை
அல்லவா.....
இதே போன்று
நாமெல்லாம் நன்கு அறிந்த மற்றும் ஒரு சாதனை மனிதர் புரட்சி தலைவர் எம்.ஜி,ஆர்
அவர்கள்.. அவர் தான் முதல்வர் நாற்காலியில் அமர அந்த நாற்காலியில் ஒரு காலாக இன்று
வரை இருப்பது பட்டுகோட்டையாரின் பாடல் வரிகள் தான் என்று சொன்னால் எத்தனை கோடி
மக்களின் அவரது நடிப்பை பார்த்து ஈர்க்கப்பட பாடல்கள் உதவியாய் இருந்திருக்கும்
என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள் நடுவர் அவர்களே...
இறுதியாக மீண்டும்
ஒரு வாழும் சாதனையாளர் ஒருவர் சொன்ன பழைய பாடலின் பெருமையை பறை சாற்றும் உதாரணத்தை சொல்லி எனது முதல் சுற்று பேச்சை முடித்து கொளிகிறேன்...
நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னால் தலைவர் திரு.சிவம் அவர்களை நாம் அனைவரும் அறிவோம்...அவர் ஊடகத்திற்கு அளித்த சமீப பேட்டி ஒன்றில் தான் சோர்ந்து போகும் போதெல்லாம் மற்றும் தன்னுடைய இளம் வயதில் அதிகம் கேட்டு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் பாடலாக குறுப்பிட்ட பாடல்... உன்னை அறிந்தால்..
நீ உன்னை
அறிந்தால்
உலகத்தில்
போராடலாம் ஆஆ..
உயர்ந்தாலும்
தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ
வாழலாம் மாபெரும் சபையினில்
நீ நடந்தால்
உனக்கு மாலைகள்
விழவேண்டும்
ஒரு மாற்று
குறையாத
மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ
வேண்டும் (2)
ஹூ.ஹூஹூஹூஹூ..ஹூ
பாடல் வரிகளை பரமார்த்தமாக யோசித்து நேசிப்போம்
நன்றி !!! வணக்கம்1!!